பொன்னியின் செல்வன் படத்தில் கமல் நடிக்கிறாரா..? வெளியே வந்த தகவல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

kamal-
kamal-

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகி வந்த பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்கள் அண்மையில் ஒவ்வொன்றாக வெளிவந்த நிலையில் நேற்று சென்னையில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மற்றும் ஆடியோ லான்ச் வெளியிடப்பட்டது.

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளது. அதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், பார்த்திபன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் சென்றடைந்துள்ளது. தமிழில் முதல் முறையாக அதிக அளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இந்த படம் பார்க்கப்படுகிறது.  அதனால் படத்தை பார்க்க சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை ஒவ்வொருவரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்க பல நடிகர் நடிகைகளும் ஆசைப்பட்டு இருந்தனராம் ஆனால் ஒரு சிலருக்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கமலும் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

ஆம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு கமலஹாசன் குரல் கொடுத்துள்ளாராம். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் கமல் குரல் மட்டும் தான் கொடுத்து உள்ளாரா இல்லை கெஸ்ட் ரோலில் ஏதாவது நடித்திருக்கிறார் என பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.