90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு அந்தஸ்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் சூர்யாவை காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஜோதிக தமிழ் சினிமாவில் கோடி கட்டி பறக்கும் சிம்பு, விஜய், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். அனால் திருமனத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலககி விட்டார் நடிகை ஜோதிகா. இவருக்கு ஒரு ஆண் மகனும், மகளும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு சரிவர சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக உடன் பிறப்பே என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவில் நடிகை ஜோதிகா ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் மம்முட்டி இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவருக்கு தமிழ் ரசிகர்களும் ஏராளமானோர் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது மம்முட்டி அவர்கள் மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் அந்த திரைப்படத்தில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக தற்போது தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதை கேள்விப்பட்ட நெடிசங்கள் என்னா 71 வயது நடிகருடன் ஜோடி சேருகிறாரா ஜோதிகா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.