Samuthirakani : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஷால். இவர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது விஷாலை சந்தோஷப்படுத்தினாலும் மறுபக்கம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் தணிகை வாரிய குழுவில் ஊழல் நடப்பதாக விஷால் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை வைத்து வீடியோவை வெளியிட்டு இருந்தாரார். அது சினிமா உலகம் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் திரையில் ஊழலை கட்டுப்படுத்துவது பரவாயில்லை.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது குறிப்பாக அரசு அலுவலகத்தில் நடப்பது மத்திய திரைப்பட தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடைபெறுகிறது. என்னுடைய மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு இரண்டு பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் கொடுக்க வேண்டியதாக இருந்தது.
திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழ்களுக்கு 3.5 லட்சம் படத்தை வெளியிட வேண்டும் என்ற நெருக்கடியால் பணத்தை கொடுப்பதை தவிர வேறு வழியே இல்லை எனவே இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்குப் போகதா வாய்ப்பே இல்லை எப்பொழுதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.
இதனை அடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிப்பதிவுத்துறை அமைச்சகம் சார்பில் விஷால் குற்றச்சாட்டுக்கு தணிக்கை குழுவின் மேல் விஷால் வைத்துள்ள குற்றச்சாட்டு மிகவும் துரிஸ்டவசமானது ஊழலை அரசு பொறுப்பேற்றுக் கொள்ளாது இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விசாரணை நடத்த மும்பை அனுப்பப்பட்டுள்ளார் என கூறியது இதனை அடுத்து விஷால் பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வருக்கு நன்றியை தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி சேலத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது என்னுடைய அப்பா திரைப்படத்திற்கு வரி விலக்கு வாங்க காசு கொடுத்தேன். அந்த காலகட்டத்தில் நியாயமாக அப்பா திரைப்படம் அரசு எடுக்க வேண்டியது.
அப்படிப்பட்ட சூழலில் நான் கஷ்டப்பட்டு நான் தயாரித்த ஒரு படத்திற்கு பணம் கொடுத்து தான் வரிவிலக்கு சான்றிதழ் வாங்கினேன் அது ரொம்ப வருத்தம் அளிக்கிறது என்றார். ஆனால் சென்சார் போர்டு இதுவரை பணம் எதுவும் கொடுத்ததில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார் காவிரிக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் அதே நேரத்தில் தனி மனிதனாக எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.