பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பா ராஜித் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்கள் இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நட்சத்திரம் நாகர்கிறது.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சற்று முன்பு வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த திரைப்படத்தில் கலையரசன்,காளிதாஸ், ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் இவர்களை தொடர்ந்து இப்படத்திற்கு தேன்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒலிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஒரு இளைஞர் கூட்டம் லவ் குறித்து டிஸ்கஸ் செய்வதுதான் இந்த திரைப்படத்தின் முழு கதை.ட்ரைலர் கூறுவதாக ஒரு பெண் மீது ஆணுக்கு கவர்ச்சி ஏற்படுவது எதனால் காதலித்த பின் காதல் வெற்றி பெற்றால் இருவருக்கும் ஏற்படும் மகிழ்ச்சி சந்தோஷம் இடையில் ஏற்படும் பிணக்கு குறித்து நன்கு ஆய்வு செய்து திரைப்படத்தினை பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார்.

மேலும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனை அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் போன்றவற்றை மிகவும் விரிவாக தத்துரூபமாக காட்டியுள்ளார் அது மட்டும் இன்றி பையனும் பையனும், பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா என்ற கேள்வியும் இந்த படம் இந்த படத்தில் எழுப்பப்பட்டுள்ளது மொத்தத்தில் காதல் குறித்து ஒரு வித்தியாசமான பார்வையில் பா ரஞ்சித் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.