தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டங்களில் ஹீரோ வில்லனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சத்யராஜ். தற்போது இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் இளம் நடிகர்களின் படங்களில் அப்பா சித்தப்பா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் சத்யராஜை தொடர்ந்து அவரது மகன் சிபிராஜும் சினிமாவில் கால் தடம் பதித்து வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரும் பல சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இருந்தாலும் முன்னணி நடிகர் எந்த அந்தஸ்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இப்படி இருக்க சிபிராஜ் விஜயின் தீவிர ரசிகனாம். இது குறித்து நடிகர் சத்யராஜ் ஒரு சமயம் பேட்டியில் பேசும்போது விஜய் மீது மிகவும் கோபமாக இருப்பதாக கூறினார். அதற்கு என்ன காரணம் என்று விலாவாரியாக பார்ப்போம். நடிகர் சத்யராஜ் பேசியது நான் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு..
ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும்.. ஒரு கட்டத்தில் வெற்றி படங்களையும் கொடுத்து நன்கு சம்பாதித்து ஒரு வீடு ஒன்றை கட்டி உள்ளேன். அந்த வீடு முழுவதும் பார்த்தால் விஜயின் படம் தான் இருக்கும். என் மகன் சிபிராஜ் விஜயின் தீவிர ரசிகன் என்பதால் வீடு முழுவதும் சுவற்றில் விஜயின் படத்தை மாட்டி வைத்துள்ளார்.
அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வீட்டை கட்டி உள்ளாரே என்று நினைக்காமல் ஒரு இடம் பாக்கி இல்லாமல் விஜய் போட்டோ வைத்து விட்டார். ஒரு ஆறுதலுக்காவது என் படம் ஒரு இடத்தில் கூட வைக்காமல் விஜய் படத்தை மாட்டி என்னை கடுப்பேற்றி விட்டான் என தன்மகன் குறித்து சத்யராஜ் பேசியுள்ளார்.