“நான் கடவுள்” படத்தின் போது எனக்கும், அஜித்துக்கும் இடையில் சண்டை நடந்தது உண்மையா.? பேட்டியில் பாலா சொன்னது.!

ajith-and-bala-
ajith-and-bala-

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த காரணத்தினால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் கெட்டியாக பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம்.

சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் அஜித் சில காரணங்களால் பல சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்துள்ளார் அந்த வகையில் ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான “நான் கடவுள்” திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது.

அஜித் தான் இந்த படத்தின் கதைக்காகவே முடியை நன்கு வளர்த்து விட்டு அதில் நடிக்க ரெடியாக இருந்தார் ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதனால் அவர் நடிக்கவில்லை என்ன காரணம் என்பது மட்டும் இன்றுவரை சரியான தகவல் வெளி வரவே இல்லை.

ஆனால் பலர் பலவிதமாக பேசுகிறார்கள். அதாவது பாலாவுக்கும், அஜித்துக்கும் இடையே மனஸ்தாபம் என்ன ஒரு பக்கம் சூழ மறுபக்கம் பாலாவுக்கும் அஜித்துக்கும் சண்டை என தனக்கு தெரிந்த பல்வேறு கருத்துகளை பலர் வைக்கின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலாவிடம் உங்களுக்கும், அஜீத்துக்கும் என்ன பிரச்சனை என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த பாலா : சண்டை எல்லாம் ஒன்னும் கிடையாது மற்றவர்கள் கூறுவது எல்லாம் சுத்த பொய் உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்னா அல்டிமேட் ஸ்டார் அஜித் இடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். என்னிடம் என இயக்குனர் பாலா பேட்டியில் பதிலளித்துள்ளார்.