தடுப்பூசி நயன்தாரா போட்டுக்கொண்டது உண்மையா.! புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை

nayanthara 2
nayanthara 2

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.  இவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த வகையில் தனது காதலருடன் இணைந்து இவ்வாறு மருத்துவமனைக்குச் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரசிகர்கள் அவர் வெளியிட்ட புகைப்படத்தை வைரலாகி வந்தார்கள். அதோடு சோஷியல் மீடியாவில் இரண்டு நாட்களாக இதுதான் ட்ரெண்டிங்காக  இருந்து வருகிறது.

தற்பொழுது கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருவதால் பல மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு படுக்கை அறை கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோடு நாள்தோறும் பல லட்ச மக்கள் உயிர் இழந்தும் வருகிறார்கள்.  தற்பொழுது கொரோனா பரவலில் இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

எனவே தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளும் பல நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்கள்.

அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து இரண்டு தினங்களுக்கு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் விக்னேஷ் சிவன்  தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தில் ஊசி தெரிகிறது.

ஆனால் நயன்தாரா போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி புகைப்படத்தில் ஊசி தெரியவில்லை. எனவே இதனை அறிந்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஜூம் பண்ணி பார்த்து ஊசி எங்கே இந்த மாதிரி பித்தலாட்டம் பண்ணி என்ன சாதிக்கப் போகிறீர்கள் என கோபத்துடன் கமெண்ட் செய்துள்ளார்.

nayanthara 3
nayanthara 3

இதனைத் தொடர்ந்து பல ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் எனவே தற்போது நயன்தாரா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

fans
fans