அஜித்தின் 61 வது படத்தில் கவின் நடிப்பது உண்மையா.. வெளிவந்த தகவல்.!

ajith and kavin
ajith and kavin

நடிகர் அஜித்குமார் கடைசியாக வலிமை திரைப்படத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தார் இந்த படம்  திரையரங்கில் கோலாகலமாக வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் கடைசி வரை 220 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இந்த வருடம் இன்னொரு படத்தை கொடுக்க அஜித் மீண்டும் ஹச். வினோத்துடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்திற்கான பூஜை ஏற்கனவே போடப்பட்ட தற்போது சூட்டிங் நடைபெற இருக்கிறது.

நடிகர் அஜித் அண்மையில் சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியது. அஜித்தின் 61வது திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இதுவரை தெரியாமல் இருக்கிறது ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் அஜித்குமார் உடல் எடையை அதிரடியாகக் குறைத்து செம்மையாக இருக்கிறார்.

நிச்சயம் அஜித்தின் 61 வது திரைப்படம் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிகர் கவின் நடிப்பார் என்ற தகவல்கள் உலா வருகின்றன ஆனால் தற்போது நமக்குக் கிடைத்த தகவலின்படி பார்க்கையில் அஜித் 61 வது திரைப்படத்தில் கவின் நடிக்கவில்லை மாறாக அவர் அஜித்தின் 62வது திரைப்படத்தை..

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்கனவே கவின் நல்லதொரு நட்பு இருந்து வருகிறார் அதனால் விக்னேஷ் சிவன் – அஜித் இணையும் படத்தில் கவின் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ஊர்க்குருவி திரைப்படத்திலும் கூட நடிகர் கவின் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.