தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் ஐ. மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் விக்ரம் இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை எமி ஜாக்சன் நடித்திருந்தார்.
அதில் எமி ஜாக்சன் நடிகை கதாபாத்திரத்திலும் விக்ரம் கூவத்தில் இருக்கும் சாதாரண ஒரு ஆண்மகன் போலவும் நடித்திருந்தார்கள். அதில் எமி ஜாக்சன் நடிகர் விக்ரமிடம் “என்ன பா லிங்கேசா சும்மா வூடு கட்டி அடிச்சு தூள் கிளப்பிட்டா போல எல்லாரு மனசிலும் இருக்கிற மஞ்சா சொத்த எடுத்துட்டு யாமே” என்ற டயலாக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்த டயலாக்கை லவ் டுடே பட நடிகை தான் டப்பிங் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அதாவது சமீபத்தில் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்து இருந்த திரைப்படம் தான் லவ் டுடே. வெளியாகி சில வாரங்களாகும் நிலையில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது உள்ள முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுத்து இருக்கிறார் பிரதீப்.
இதனால் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான முன்னணி நடிகர்கள் பிரதிபிடம் வாய்ப்பு தருமாறு கேட்டு வரும் நிலையில் அடுத்ததாக பிரதீப் நடிகர் விஜய் வைத்து தரமான கதை அம்சம் உள்ள திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார் மேலும் பிரதீப் அக்காவாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் ரவீனா ரவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரவீனா ரவி தான் ஐ படத்தில் எமி ஜாக்சன் தர லோக்கலாக பேசிய வசனத்திற்கு டப்பிங் கொடுத்ததாக சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.