ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாளடைவில் நமது தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்கள் எண்ணிக்கை குறைந்த வண்ணமே இருக்கிறது.
அந்தவகையில் பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீராம் என்பவர் சிறந்த பாடகர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே இசை மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இசையை சிறப்பாக கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் இசையில் கடல் திரைப்படத்தில் அடியே என்ற பாடல் மூலமாக பிரபலமாகிவிட்டார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்தின் திரைப்படத்தில் ஒரு பாடல் படுவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டுக் கொடுத்து விட்டது அது வேறு எந்த பாடலும் கிடையாது விசுவாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் தான்.
அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ திரைப்படத்தில் கூட என்னோடு நீ இருந்தால் மற்றும் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் தள்ளிப்போகாதே போன்ற பல்வேறு மெகாஹிட் பாடல்களையும் ஸ்ரீராம் தான் பாடியுள்ளார்.
மேலும் இவர் பயிற்சி எடுத்த பிறகு சுமார் 2 மணி நேரத்திலேயே பாடலை பாடி முடித்து விடுவார். அந்த வகையில் இவர் ஒரு பாடலுக்கு சுமார் நான்கு லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். அதேபோல ஸ்ரீராமுக்கு பிறகாக அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் ஒரு பாடகி என்றால் அது ஸ்ரேயா கோஷல் தான்.
அவரும் தன்னுடைய பதினாறு வயதில் இருந்தே திரைப்படங்களில் பாடல் பாட ஆரம்பித்தது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் இடம்பெற்ற திரைப்படங்களில் பாடல் பாடி வருகிறார்.
அந்தவகையில் இவர் ஜில்லுனு ஒரு காதல், வெயில், விண்ணை தாண்டி வருவாயா போன்ற படங்களில் பாடல் பாடியது இன்றளவிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர் ஒரு பாடலுக்கு 3 லட்சம் வரை சம்பளம் பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. அதேபோல பாடகி சாதனா ஒரு பாடலுக்கு இரண்டு லட்சம் வரை சம்பளம் பெறுகிறார் ஆம்.