வயிற்று புள்ளத்தாச்சின்னு கூட பாக்காம இப்படியா..? ராஜா ராணி சீரியல் இயக்குனரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

alya-manasa-2
alya-manasa-2

பொதுவாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் தான் ராஜா ராணி சீரியல்.

இந்நிலையை இந்த சீரியலில் கதாநாயகியாக  நடிகை ஆலியா மானசா நடிப்பது மட்டுமில்லாமல் இந்த சீரியல் ஆனது இளைஞர்கள் மற்றும் பெருசுகள் என பலரையும் கவர்ந்தது மட்டும் இல்லாமல் முழுக்க முழுக்க இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

அந்த வகையில் இந்த சீரியலில் அடிக்கடி ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெறுவது மட்டுமில்லாமல் முத்தக் காட்சிகளும் இடம்பெற்று வருகிறது அந்த வகையில் சென்ற வாரம் கூட  சித்துக்கு ஆலியா மானசா முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

ஆனால் ஆலியா மானசா உண்மையிலேயே தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் போது கூட இவர் சீரியலில் நடிக்க தயக்கம் தெரிவிக்காமல் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான புரோமோ ஒன்றில் ஆலியா மானசா வை சித்து தூக்கி சுற்றுவது போல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது இதைப் பார்த்து பலரும் ஆலியா மானசா கர்ப்பமாக இருக்கிறார் இந்த நிலையில் இப்படி ஒரு காட்சி தேவையா என இயக்குனரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒருசிலர் இந்த சீரியலில் இப்படி ஒரு காட்சி இப்பொழுது தேவையான ஆலியா மானசா விற்கு ஆறுதலாக  ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

alya-manasa-2
alya-manasa-2