தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஆள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்புத் திறமையை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடப்பது நயன்தாராவின் வழக்கம்.
சமீபகாலமாக நீங்கள் கூட அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்களில் கூட பார்த்திருக்க முடியும். இவர் கடைசியாக சோலோவாக நடித்து சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி அடைந்த திரைப்படம் நெற்றிக்கண் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதுவும் ரஜினிக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் அவர் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள “கோல்ட்” என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் பல பட வாய்ப்புகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நயன்தாராவை கமிட் செய்ய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கதை சொல்ல கியூவில் நிற்கின்றனர்.
அந்த அளவிற்கு தற்போது பிஸியான நடிகையாக இருக்கிறார் இதனாலேயே அவர் தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை இன்றுவரையிலும் தக்க வைத்துள்ளார். சமிப காலமாக நயன்தாரா சினிமா நேரம் போக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலனுடன் இணைந்து எங்கேயாவது ஊர் சுற்றும் புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.
இந்த நிலையில் முதல் முறையாக விக்னேஷ் சிவனையே கழட்டிவிட்டு நயன்தாரா எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகை நயன்தாரா இந்த செல்பி புகைப்படத்தில் எப்படி இருக்கிறார் பாருங்கள்..