அட்லீயை டென்ஷன்னாக்கி பார்த்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.?

nayanthara-
nayanthara-

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக இருக்கிறார் இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துள்ளார் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுதும் பல்வேறு புதிய படங்களில் கமீட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, மும்பை மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. ஜவான் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ராணுவ கதையாக உருவாகி வருகிறது ஷாருக்கான்.

இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இதில் ஒரு ஜெயில் கைதியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகின்றன ஜவான் படத்திலிருந்து இதுவரை ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளிவந்துள்ளது படம் அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா பற்றிய தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவான் படப்பிடிப்பின் பொழுது தனது தாலியை அணிந்து உள்ளார். ஒவ்வொரு காட்சியிலுமே அவர் தாலியை கழட்டாமல் நடித்த வருகிறாராம் இதை பார்த்த அட்லீ தாலியை கழற்றி வைத்து நடிக்கலாமே என கேட்க தாலி பற்றி மட்டும் என்னிடம் பேசாதே..

அதை கழற்றவே மாட்டேன் .. தாலி மறையும் படி ட்ரெஸ் கொடு தம்பி என கேட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.