லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த மகிழ் திருமேனிக்கு ஏகே 62-ல் கோடிகளில் சம்பளமா.? எத்தனை கோடி தெரியுமா.?

makizh-thirumani
makizh-thirumani

முன்தினம் பார்த்தேனே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு தடையறத் தாக்க, தடம் என ஒரு கமர்சியல் வெற்றி படத்தை கொடுத்தவர் தான் இயக்குனர் மகிழ் திருமேனி. இவர் தற்போது ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் அவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் அப்டேட்டும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் ஏகே 62 திரைப்படத்திற்காக வாங்க போகும் சம்பளத்தையும் மகிழ் திருமேனி வாங்க போகும் சம்பளத்தையும் குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது இதுவரைக்கும் 100 கோடியை தாண்டாத அஜித் ஏகே 62 திரைப்படத்தில் 105 கோடி வரை சம்பளமாக பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில பிரச்சனையின் காரணமாக அவர் இந்த திரைப்படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டார்.

அதன் பிறகு இந்த திரைப்படத்தில் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தனர். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு மகிழ் திருமேனி 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் அவர்களுக்கு ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதற்கு 13 கோடி வரை சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அவர் கேட்டதை விட மூன்று கோடி மிச்சம் செய்து லைக்கா நிறுவனம் 10 கோடி ரூபாய் தான் சம்பளம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லட்சத்தில் புரண்டு கொண்டு இருந்த மகிழ் திருமேனி ஏகே 62 திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக கோடிகளில் சம்பளம் வாங்க உள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்ரே சொல்லலாம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.