பிறந்தநாள் அதுவுமா.. கவர்ச்சி நடிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட யோகி பாபு.? காரணம் இந்த படம் தான்- தீயாய் பரவும் செய்தி.

yogi-babu

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் குறுகிய காலத்திலேயே ஓவர்டேக் செய்து விட்டு தனக்கான இடத்தை பிடித்து உள்ளார் நடிகர் யோகிபாபு. தற்போது காமெடியனாகவும், சோலோ ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டு வருவதால் இவரது மார்க்கெட் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் போன்ற ஜாம்பவான்கள் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த நிலையில் தற்போது சரவணன் அருள் நடிக்கும் ஒரு புதிய படத்தில் தற்போது யோகிபாபு  கலந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவர்களுடன் சேர்ந்து ஊர்வசி ரவுத்தேலா, மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர். பல மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியது.

அப்போது யோகி பாபுவின் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினர் அவருக்கு தெரியாமல் மிகப்பெரிய ஒரு கேக்கை ஆர்டர் செய்து அவரை வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் பின் கேக் வெட்டி கொண்டாடினார் யோகிபாபு மேலும் தனது படக்குழுவினருடன் இவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதோ அந்த புகைப்படம்.