தனுஷ் படத்தில் நயன்தாரா நடிக்காதது நல்லது போச்சு..? பெருமூச்சு விடும் ரசிகர்கள்.!

dhanush
dhanush

தனுஷ் நடிப்பில் உருவாகி வெளிவந்த அசுரன் கர்ணன் ஆகிய இரு படங்களின் கதை அம்சம் சிறப்பாக அமைந்ததால் இந்த படம் ரசிகர்கள் மக்கள் என பலருக்கும் பிடித்த படமாக அமைந்தது இதை தொடர்ந்து அவர் நடித்த மாறன் ஜகமே தந்திரம் ஆகிய இரு படங்களும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்றுத் தரவில்லை. இந்த திரைப்படங்கள் இரண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு படங்களின் தோல்வியை தொடர்ந்து தனுஷ் அடுத்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வந்தார். அந்த வகையில் நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்த படங்களின் மூலம் விட்ட இடத்தை தனுஷ் பிடிப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அண்மையில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை கண்டு வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவகr இயக்கியிருந்தார் சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்தது மற்றும் இந்த படத்திற்கு தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் அதிக வசூலையும் ஈட்டி வருகிறது.

இந்த படத்தில் தனுசுடன் இணைந்து நித்தியா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்தப் திரைப்படத்தை முதலில் தனுஷ் தயாரிப்பில் அவரே நடிக்க இருந்தாராம். அப்போது நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவும் ராசி கண்ணா கதாபாத்திரத்திற்கு ஹன்சிகாவும் பிரியா பவானி சங்கர் கதாபாத்திரத்திற்கு சமந்தா விடமும் பேச்சுவார்த்தை நடந்ததாம்.

பின்பு சில காரணங்களால் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இயங்காமல் இருந்ததால் இந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் நயன்தாரா நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருந்ததே ரொம்ப நல்லது. ஏனென்றால் நயன்தாராவால் நித்யா மேனன் நடித்த அளவிற்கு எதார்த்தமாக நடிப்பாரா என்றால் சந்தேகம் தான் எனக் கூறி வருகின்றன.