சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்யலாம் என்று தோன்றுகிறது என்று கௌதம் மேனன் கூறியது தற்போது பரபரப்பு கிளப்பியுள்ளது. அதாவது கௌதம் மேனன் அவர்கள் ஒரு டிவியில் பேட்டி ஒன்ரில் பேசியதில் இருந்து அதை பார்த்து ப்ளு சட்டை மாறன் அவரை விடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சி செய்கிறார்.
நீதான் தைரியமான ஆளாச்சே என்ன செய்யப் போறேன்னு தைரியமா சொல்லு என்று பொழுது விடிவதற்குள் கௌதம் மேனனை வம்பு இழுத்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதேபோல் ப்ளு சட்டை மாறன் அவர்கள் பார்த்திபனின் இரவு நிழல் படத்தை விமர்சித்து பார்த்திபனுடன் சண்டை போட்டு உள்ளார்.
இதைப் பார்த்து கடுப்பான பார்த்திபன் ப்ளு சட்டை மாறனுக்கு ரிவிட் அடிக்கவே சில நிமிடம் பார்த்திபனை பற்றி பேசினார் ப்ளூ சட்டை மாறன். ஆனால் பார்த்திபனை விட்டு விட்டு தற்போது கௌதம் மேனனை பிடித்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் பார்த்திபன் அவர்கள் ப்ளு சட்டை மாறனை கண்டு கொள்ளாத நிலையில் ப்ளூ சட்டை மாறன் அந்த விமர்சனத்தை விட்டு விட்டார்.
பார்த்திபனை போலவே கௌதம் மேனனும் ப்ளு சட்டை மாறனை இறங்கி செய்யலாம் என்று தோணுது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இன்நிலையில் இறங்கி செய்யறதுனா என்னனு ஒரு லிஸ்ட் போட்டு கௌதம் மேனனிடம் நேரடியாக மோதலில் இறங்கியுள்ளார் ப்ளு சட்டை மாறன்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் பெயரில் உள்ள மேனன் அவரது சாதி பெயர் அதனை ஏன் வைத்துள்ளார் என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார் அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலேயே சாதி அடையாளத்தை பெருமையாக வைத்துக் கொள்ளும் ஒரே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் என்று கூறியுள்ளார்.
சினிமாவில் அவர் இயக்கிய ஆரம்ப படங்கள் எல்லாம் கௌதம் என்று மட்டுமே பெயர் போடப்பட்டுள்ளது என்று மேலும் ஒரு சிலர் ட்விட் போட்டு பிரச்சனையை பெரிதாக்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதனை தொடர்ந்து இறங்கி செய்யப் போறேன்னு ஈயம் பூசி பேட்டி கொடுத்தா போதுமா.? என்ன செய்யப் போறேன்னு ஓபனா சொல்லு என்று வடிவேலுவின் சுனா பானா மீம் போட்டு கௌதம் மேனனை விடாமல் வச்சி செய்கிறார்.