கல்யாண வயசுல பொண்ண வச்சிக்கிட்டு இன்னொரு குழந்தையா.! தந்து அம்மாவை கிண்டல் செய்தவரை தனது பாணியில் வெளுத்துவிட்ட இனியா

தமிழ் தொலைக்காட்சியில் இருந்து வரும் பல முன்னணி தொலைக்காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பை வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி. அந்த வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் வாணி ராணி இந்த சீரியலில் ராதிகா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இல்லதரசிகளின் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்த தொடரில் வாணியின் மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர் அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் வளர்ந்தது வாழ்ந்தது எல்லாம் சென்னை தான் தன்னுடைய தந்தையின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் தமிழில் பைரவி என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி பிறகு பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். மேலும் தீ எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலம் அடைந்த இவர் 2011ஆம் ஆண்டு சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த ஜாக்சன் குதிரை திரைப்படத்தில் முதன் முறையாக நடித்திருந்தார் நேஹா.

இவ்வாறு இவர் நடித்திருந்தாலும் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இவருக்கு தற்பொழுது 20 வயதாகும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி அன்று தனது அம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில் சில பேர் இந்த வயதில் குழந்தை பெத்துக்க வேண்டுமா என அவருடைய அம்மாவை விமர்சனம் செய்து வந்தார்கள்.

neha 1
neha 1

மேலும் அனைத்திற்கும் ரிப்ளை செய்து வந்த இவர் சமீபத்தில் தன்னுடைய அதற்காக இங்கே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று பதிவிட்டு இருந்தார் இந்நிலையில் தனது தங்கையின் முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் நேகா. அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு சில மாதங்கள் தன்னுடைய 20வது பிறந்த நாளையும் கொண்டாடி இருந்தார்.

neha

இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த இவர் அப்பொழுது ஒருவர் காலேஜ் முடிச்ச பொண்ணை வச்சிக்கிட்டு இன்னொரு குழந்தையா ஸ்கூல் படிக்கிற பொண்ணுக்கு ஜோடி இருக்கக் கூடாதா என்று கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த நேஹா இரண்டும் சம்பந்தமே இல்லாத கேள்வியாக இருக்கிறது காலேஜ் படிக்கிற பொண்ணு இருந்தாலும் இல்லைனாலும் எந்த குழந்தை பெற்றுக் கொள்வது எந்த தப்பும் கிடையாது. அந்த ஒரு எண்ணத்தை நீங்கள் தயவு செய்து மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.