இம்சை அரசன் 24-ம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலுக்கு பதில் இனி இவரா.? சிம்புதேவன் அதிரடி… வடிவேலு நடிப்புக்கு இணையாக நடிக்க முடியுமா.? ரசிகர்கள் கேள்வி..

24-pulikesi
24-pulikesi

கடந்த 2006 ஆம் ஆண்டு சிம்பு தேவன் எழுதி இயக்கிய ஒரு தமிழ் வரலாற்று நகைச்சுவை திரைப்படமாக வெளியாகிய திரைப்படம் தான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இந்த திரைப்படத்தில் வடிவேலு ஹீரோ கலந்த நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இன்று தொலைக்காட்சியில் இந்த திரைப்படத்தை ஒளிபரப்பினாலும் மக்கள் ஆவலுடன் பார்ப்பார்கள் அந்த அளவு இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

சிம்பு தேவன் மீண்டும் இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு 23ஆம் தேதி வெளியிடப்பட்டது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, பார்வதி, ஓமனக்குட்டன் மனோபாலா, இளவரசு ஆகியவர்கள் நடித்து வந்தார்கள்.

இந்தத் திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஷங்கரின் எஸ் பிக்சர் இணைந்து தயாரித்து வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் இசையமைத்து வந்தார் தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் மற்றும் ஒளிப்பதிவாளர் சரவணன் ஆகியவர்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தார்கள். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது வடிவேலுக்கும் ஷங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து படக்குழுவிற்கும் வடிவேலுக்கும் சண்டை வந்து கொண்டே இருந்தது அதனால் படப்பிடிப்பை ஒழுங்காக நடத்த முடியவில்லை அதனால் சங்கர் திரைப்படத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நாடினார் அதன் பின்னணியாக வடிவேலுவை வைத்து இந்த திரைப்படத்தை எடுக்க தடை விதித்தது அதனால் படப்பிடிப்பு நின்றது.

இந்த நிலையில் சிம்பு தேவன் மீண்டும் தமிழ் வரலாற்று சரித்திர கதையாக ஒரு கதையை எழுதியுள்ளார் இந்த கதை கிட்டத்தட்ட 24 ம் புலிகேசி சாயலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது இந்த திரைப்படத்தில் யோகி பாபுவை கதாநாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 24 ம் புலிகேசி திரைப்படத்தில் மீண்டும் யோகி பாபுவை வைத்து எடுக்கப் போகிறார்களா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது ஒரு சில ரசிகர்கள் வடிவேலு நடிப்பு போல் யோகி பாபுவிற்கு நடிப்பு வருமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.