தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது இதில் முதல் பாகம் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவு பெற்று வருகிறது.
அடுத்ததாக நடிகர் சிம்பு அவர்கள் பத்து தல திரைப்படத்தில் நடித்து உள்ளார் இந்த திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் தற்போது பத்து தலை திரைப்படத்திலிருந்து ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் நாரதன் மற்றும் இயக்குனர் கிருஷ்ணன் ஆகியோர் இயக்கி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் சிம்பு அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கௌதம் கார்த்திக் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
மேலும் பத்து தல திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், டிஜெய் அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நடிக்க உள்ளார் என்று தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதனால் பத்து தலை படத்தின் மீது உள்ள ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட பத்து தலை திரைப்படம் ஒரு சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் வில்லனாக கௌதம் மேனன் நடிக்கிறார் என்றால் இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ஏனென்றால் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் நடிப்பின் மூலம் இயல்பாகவே ரசிகர்களை தனிப்பட்ட முறையில் கவர்ந்து விடுவார் அதேபோல் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கௌதம் மேனனுக்கு கிடைத்துள்ளது இதில் எந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.