ஹீரோ, ஹீரோயினை தொடர்ந்து வில்லனை தேர்வு செய்த தளபதி 68.? அட இவரா.?

vijay 68
vijay 68

Thalapathy  68 : தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்

இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக உருவாகியுள்ளது விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக் பாஸ் ஜனனி என பல திரைப் பட்டாளங்கள் நடித்துள்ளனர் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது

விஜய் லியோ படத்தை முடித்த கையோடு உடனடியாக தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க உள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட்  படமாக உருவாக இருக்கிறது என தெரிய வந்துள்ளது.

படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது அவருக்கு ஜோடியாக  சிம்ரன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தளபதி 68 படத்தில் யார் வில்லன் என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது அதன்படி   படத்தில் நடிகர் விஜய் தான் வில்லனாகவும் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் விஜய் நடிக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக  பெரிய வருகிறது.  விஜய் மூன்று வேடங்களில் நடித்த படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளன அந்த வரிசையில் தளபதி 68 படமும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.