நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தாவை பத்திரமாக பார்த்துக் கொண்டது இவரா.? பாராட்டும் ரசிகர்கள்

samantha
samantha

சமந்தா முதலில் மாடல் அழகியாக தன்னை வெளிகாட்டிக்கொண்டார் பின் வெள்ளி திரையில் நுழைந்தார். பாணா காத்தாடி என்னும் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்தார் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார்.

தொடர்ந்து சினிமா உலகில் ஓடிய இவர் தெலுங்கில் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் ஜொலித்து வந்த இவர்களுக்கு திடீரென பிரச்சனை வர விவாகரத்து பெற்று பிரிந்தனர் அதன் பிறகு நடிகை சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது..

மற்றும் சோசியல் மீடியாக்களில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களையும் வெளியிட்டார் ரணகள படித்து வந்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் தாக்கியது  இதனால் சமந்தாவின் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட அவர்  ஒரு வழியாக நோயிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை ஏற்றி வருகிறார் மறுபக்கம் படங்களில் நடிக்கவும் கவனம் செலுத்தி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமந்தா நோயால் பாதிக்கப்பட்ட போது அவரை யார் பார்த்துக் கொண்டார் என்பது குறித்து தகவல்களை உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தாவை அவருடைய தாய் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டாராம் சென்னையில் இருந்த சமந்தாவின் அம்மா உடனடியாக ஹைதராபாத் சென்று சமந்தாவை பத்திரமாக பார்த்துக் கொண்டு தற்போதும் அவருடன் தான் இருக்கிறார் என கூறப்படுகிறது.

samantha
samantha

சமந்தாவுக்கு சென்னையையும் தாண்டி பல முக்கிய இடங்களில் வீடு பங்களா என இருக்கிறது. குறிப்பாக ஹைதராபாத்தில் மிகப்பெரிய வீடு மற்றும் பல சொத்துக்கள் இருப்பதால் சமந்தா அங்கேயே தங்கியிருக்கிறார் அவரது அம்மாவும் தற்போது சமந்தாவுடன் ஹைதராபாத்தில் தான் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.