தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக தனுஷ் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். மேலும் தனுஷ் நடிக்க உள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று இன்று ரிலீஸ்சாக இருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக முன்பே பட குழுவினர்கள் அறிவித்து இருந்தார்கள்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாக இருக்கும் இந்த பாடலின் டைட்டில் வீரா சூரா என்றும் இந்த பாடலின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளார் என்று சற்று முன்பு இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தான் அவர்கள் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த பாடலின் ரிலீசாக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இவ்வாறு இந்த திரைப்படத்தில் தொடர்ந்து இதே போல் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷ், எல்லி ஆவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன் யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த படம் ஓம் பிரகாஷ் ஒளி பதிவில் பிரசன்னா பட தொகுப்பில் உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வரும் இவர் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.