என்னது.! அருண் விஜய் நடித்த “யானை” படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா.? ரகசியத்தை உடைத்த பிரபலம்.!

yaanai

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து உள்ளார். இந்த படங்களை மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடினர் மேலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக விஸ்வரூபம் அடைந்தன.

தற்போது கூட இயக்குனர் ஹரி அருண் விஜய் உடன் முதல் முறையாக இணைந்து  யானை திரைப்படத்தை எடுத்தார் இந்த படம் ஆக்சன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போன படமாக இருக்கிறது.

தற்பொழுது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. யானை படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ஐஸ்வர்யா, பாஸ்கரன், கங்கை அமரன், சஞ்சீவ் வெங்கட், ராமச்சந்திரன், ராஜூ போன்ற பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தினர்.

இது படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக இதுவரை உலக அளவில் சுமார் 15 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது.

surya
surya

இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தகன் youtube ஒன்றில் சில விஷயங்களை கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது. யானை திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது சூர்யா என கூறினார் மேலும் அவர் சொன்னது இயக்குனர் ஹரி சூர்யாவை சந்தித்து கதை எல்லாம் சொல்லினார். ஆனால் சூர்யா இந்த படத்தில் நடிக்க முன் வரவில்லை உடனே அருண் விஜயை வைத்து யானை திரைப்படத்தை எடுத்ததாக பேட்டியில் கூறினார்.