இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது திரை பயணத்தில் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்க்கு தான் படங்களை எடுத்து இருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் இடம் பிடித்தன அதனால் தற்போது டாப் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறார்.
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். இந்த படமும் அவருடைய வழக்கமான ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வந்தாலும் ஸ்டண்ட் கட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, திரிஷா என பல திரைப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் நான் ரெடி பாடல் வெளிவந்து வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் இணைய உள்ளார் என தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ரஜினி உடன் இணைவதற்கு முன்பாகவே பிரபல தெலுங்கு டாப் ஹீரோ பிரபாஸ் உடன் இணைந்து ஒரு படம் பண்ண உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த படம் பிரபாஸுக்கும் சரி, லோகேஷுக்கும் பெரிய படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ரஜினியும் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தனது மகள் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து ஜெய் பீம் பாட இயக்குனருடன் ஒரு படம் பண்ண இருக்கிறார் இதை முடித்த பிறகு லோகேஷ் உடன் இணைவார் என கூறப்படுகிறது.