Vidaamuyarchi : ஆக்சன் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கலகத் தலைவன் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடியது அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறார்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக இருக்கும் என பேச்சுக்கள் அடிபட்ட வண்ணமே இருக்கின்றன. விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத், பிக்பாஸ் ஆரவ், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர் நோக்கி காத்து இருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் விடாமுயற்சி குறித்து உதயநிதி பேசியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் சொன்னது.. மீகாமன் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தடம் படம் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்தது ஹிட் அடித்தது.
ஆனால் இந்த படத்தில் முதலில் நான் தான் நடிக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது உடனே மகிழ் திருமேனியை அழைத்து உங்களுடைய அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என கூறினேன். ஆனால் அந்த சமயத்தில் மகிழ் திருமேனி விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்து வைத்திருந்தார்.
நான் சொன்னதால் முதலில் கலகத் தலைவன் படத்தை எடுத்தார் அதன் பிறகு விஜயை வைத்து அந்த படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் ஆனால் விஜய் அந்த கதையில் நடிக்காததால் அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற பெயரில் படத்தை எடுத்துவருகிறார் என கூறினார். அஜித்திற்காக அந்த கதையில் சில மாற்றங்களையும் செய்திருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.