“தீனா” படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித்தோ.. விஜயோ.. கிடையாது.? வெளிவரும் உண்மையான தகவல்

ajith-
ajith-

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித் வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. நடிகர் அஜித் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இருப்பினும் அவருடைய கேரியரில் இன்றும் பெரிய அளவில் பேசப்படும் திரைப்படம் என்றால் அது தீனா தான் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் அனைத்தும்..

கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் அப்பொழுது பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்துக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் ஏரியது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் தான் ஏ ஆர் முருகதாஸிடம் ஏதாவது ஒரு ஆக்சன் கதை இருந்தால் கூறுங்கள் என கேட்டு உள்ளார்.

அப்படித்தான் “தீனா” திரைப்படம் உருவானது என ஏ ஆர் முருகதாஸ் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறினார். ஆனால் உண்மை என்னவென்றால் முதன் முதலில் தீனா திரைப்படத்தில் நடிக்க இருந்தது அஜித் கிடையாதாம்..  தீனா படத்திற்கு தளபதி விஜயை தான் ஏ ஆர் முருகதாஸ் அணுகியதாக ஒரு தகவல் வெளியானது இப்படி இருக்கின்ற நிலையில் தீனா திரைப்படத்தில் முதலில் அஜிதோ.. விஜயோ..

நடிக்க ஏ ஆர் முருகதாஸ் அணுகவில்லையாம் முதன் முதலில் நடிகர் பிரசாந்திடம் தான் சொன்னாராம் ஆனால் அப்பொழுது நிறைய படங்களில் பிரசாந்த் நடித்து வந்ததால் “தீனா” திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையாம் இதனை பிரசாந்தின் அப்பா  தியாகராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார்.