புஷ்பா படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? தேசிய விருதை மிஸ் பண்ணிட்டாரே..

puspa

Puspa : கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட அல்லு அர்ஜுன்  நல்ல ஆக்ஷன் கலந்த கிராமத்து கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என தான் சந்தித்த இயக்குனர்களுடன் சொல்லி வந்தாராம்.

அப்படி சுகுமாரிடம் ஒரு கதை இருப்பதை தெரிந்து கொண்ட அல்லு அர்ஜுன் அவரை சந்தித்து கதையை கேட்டுள்ளார் அந்த கதை ரொம்ப பிடித்து போகவே உடனடியாக புஷ்பா படமாக உருவானது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சமந்தா, சுனில்,  பரத்வாஜ், மைம் கோபி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர்.

புஷ்பா  படம் 2021 செப்டம்பர் 17ஆம் தேதி கோலாகலமாக வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் புஷ்பா திரைப்படம் ஆந்திராவையும் தாண்டி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் அள்ளியது.  புஷ்பா  300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி  சாதனை படைத்தது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் அதிரடியாக உருவாகிய வருகிறது படம் முழுக்க முழுக்க காடு, மலை சார்ந்த எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2021 ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது இதில் புஷ்பா படத்திற்கு பல தேசிய விருது கிடைத்தது குறிப்பாக அல்லு அர்ஜுனின் மிகச்சிறந்த நடிகருக்கான தேசிய விருது  கிடைத்தது இதுவரை எந்த ஒரு தெலுங்கு ஹீரோவும் தேசிய விருது வாங்கியதே கிடையாது முதன்முறையாக அல்லு அர்ஜுன் தான் வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் புஷ்பா  படத்தின் முதலில் நடிக்க வேண்டியது அல்லு அர்ஜுன் கிடையாது என கூறப்படுகிறது.  மகேஷ் பாபு தான் முதலில் நடிக்க வேண்டியது மகேஷ் பாபு தானாம். இயக்குனர் சுகுமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஷ் பாபு விலகினார் பின் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் நடித்தார் என கூறப்படுகிறது.

mahesh babu
mahesh babu