“நான் மகான் அல்ல” படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா.

karthi

Vishnu vishal : தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன், சர்தார் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன கைவசம் ஜப்பான், கைதி 2, சர்தார் 2, கார்த்தி 23 போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன.

இதில் முதலாவதாக ஜப்பான் திரைப்படம் அதிரடியாக உருவாகி வருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட அண்மையில் வெளிவந்து வைரல் ஆகியது இதை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருக்கும் என தெரிய வருகிறது  .

இப்படி வெற்றி படங்களை கொடுத்து வரும் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி 2010 ஆம் ஆண்டு காஜல் அகர்வருடன் கைகோர்த்து நான் மகான் அல்ல படத்தில் நடித்தார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது.

இந்த படம் நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படம் என்றும் கூறலாம்.  ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியது வேறு ஒரு ஹீரோ தானாம். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். சமீபத்தில் விஷ்ணு விஷால் சொன்னது.. நான் மகான் அல்ல படத்தில் முதலில் நடிக்க வேண்டியது கார்த்தி கிடையாது. சில காரணங்களால் அதை நான் தவற விட்டேன்.

 

vishnu vishal
vishnu vishal

அதில் நடித்திருந்தால் என்னுடைய சினிமா பயணம் வேறு மாதிரி சென்று இருக்கும் தவற விட்டேன் என கூறி புலம்பி உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இப்போ ஃபீல் பண்ணி ஒன்னும் ஆவறதுக்கு இல்லை எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.