80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன் . இவர் திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்தார் அந்த வகையில் செண்பகமே செண்பகமே, எங்க ஊரு காவல்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, தங்கமான ராசா, சீறி வரும் காளை, கரகாட்டக்காரன் என படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த இவர் கடந்த சில வருடங்களாக சினிமா பக்கம் நடிக்காமல் அரசியல்களில் தடை காட்டி வந்தார்.
இருப்பினும் வாய்ப்புகள் எட்டிப் பார்த்தன ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என சொன்னதால் வாய்ப்புகள் குறைந்தன.. இனி ராமராஜன் வெள்ளித்திரையில் பார்க்க முடியாது என நினைத்தவர்களுக்கு திடீரென ஒரு செய்தி குண்டை தூக்கிப் போட்டது. ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன் சாமானியம் என்னும் படத்தில் நடித்து வருகிறார் அவருடன் கைகோர்த்து ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் கரகாட்டக்காரன்.. இந்த படத்தில் ராமராஜன் உடன் இணைந்து கனகா, செந்தில், கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் கரகாட்டக்காரன் திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது முதலில் இந்த படத்தில் ஹீரோயின்னாக நடிக்க வேண்டியது கனகா இல்லை.. வேறு ஒரு நடிகை என சொல்லப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
கரகாட்டக்காரன் திரைப்படம் உருவாகுவதற்கு முன்பு பல நாட்களாக அதன் கதையை எழுதி வந்தார் கங்கை அமரன் அப்பொழுது ஒருமுறை எதர்ச்சியாக நடிகை சுகன்யாவை பார்த்து உள்ளார் கங்கை அமரன் நடிகை சுகன்யா நடனம் ஆடுவதற்காக தான் சினிமாவிற்கு வந்தார் எனவே மற்ற டான்ஸ் ஆடும் பெண்களோடு இவரும் இருந்தார் அவரை பார்த்ததும் யார் இந்த பெண் புதிதாக இருக்கிறார் என கேட்டுள்ளார்.
கங்கை அமரன் சுகன்யாவை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்ட கங்கை அமரன் சில நாட்கள் கழித்து நேரில் சென்று சுகன்யாவை சந்தித்துள்ளார் அவரிடம் கரகாட்டக்காரன் என்று ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன் நீ தான் அதுல கதாநாயகி, நான் முடிவு பண்ணிட்டேன் எனக்கூறி உள்ளார் ஆனால் இறுதி கட்டத்தில் அந்த வாய்ப்பு எப்படியோ கனகாவிற்கு மாறிவிட்டது இல்லை எனில் அந்த படம் சுகன்யாவிற்கு முதல் படமாக இருந்திருக்குமாம்