ஆடுகளம் படத்தில் இவர்தான் முதலில் நடிக்க வேண்டியதா.? அவார்ட் போச்சே குமாரு…

aadukalam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த படம் தேசிய விருதையும் பெற்று தந்தது அது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டாம்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இரண்டாவது கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக தனுஷும் வெற்றிமாறனும் இணைந்த படம் தான் ஆடுகளம்.

இந்த படத்தில் கிஷோர், நரேன், ஜெயபாலன், டாப்ஸி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் அமைந்துள்ள அனைத்து பாடல்களும் ஹிட் அடித்த நிலையில் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விறுதையும் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விறுதையும் பெற்றுத் தந்தது.

இப்படி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் டாப்சிக்கு பதிலாக முதலில் திரிஷா தான் நடிக்க இருந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அது மட்டும் அல்லாமல் திரிஷாவை வைத்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டது ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக திரிஷா படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இந்த செய்தி அப்போது செம வைரல் ஆனது.

தற்போது இதேபோல பிரபல நடிகர் முதலில் ஆடுகளம் படத்தில் நான் தான் அடிக்க வேண்டி இருந்தது என்று கூறியுள்ளார் அதாவது ஆடுகளம் படத்தில் நடிகர் பார்த்திபன் அவர்கள் நடிக்க இருந்தது என்று கூறியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டாராம். அனால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் என்பது இன்னம் வெளிவராத தகவலாக இருந்து வருகிறது.