மாமன்னனில் மாஸான வடிவேலு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? ரகசியத்தை உடைத்த மாரி செல்வராஜ்

maamannan
maamannan

maamannan : திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் அதிகம் ஈடுபாடு காட்டியதால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தார். மாரி செல்வராஜுடன் சேர்ந்து தான் பண்ணும் மாமன்னன் படம் தான். எனக்கு கடைசி படம் என அறிவித்தார் உதயநிதி. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் அதிகரித்தது.

ஒருவழியாக படம் ஜூன் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதைக்கு ஏற்றவாறு பகத் பாசில், வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களும் அற்புதமாக நடித்திருந்தனர். மேலும் படம் இந்த காலகட்டத்திற்கு தேவையான பல கருத்துக்கள் இருந்ததால் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் மாமன்னன் படம் வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை இதுவரை மட்டுமே 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. இந்த நிலையில் மாமன்னன் திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் ஒரு உண்மையை உடைத்து உள்ளார்..
மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றி பெற முக்கிய காரணமே வடிவேலு தான் அவருடைய மாறுபட்ட நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆக இருந்தது.

படத்தை பார்த்த பலருமே வடிவேலு நடிப்பை புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் பலரும் சொல்லி வருகின்றனர் இந்த படத்தால் வடிவேலு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் மேலும் அடுத்த படத்திற்காக தனது சம்பளத்தையும் அவர் உயர்த்திவிட்டார் இப்படி மாமன்னன் படத்தின் மூலம் புகழின் உச்சியில் இருக்கும் வடிவேலு பற்றி மாரி செல்வராஜ் சொன்னது என்னவென்றால்..

மாமன்னன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது வடிவேலு  கிடையாது முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை தான் தேர்வு செய்தேன் என கூறியுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல.. காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பின்னி பெடல் எடுக்கும் நடிகர் சார்லியை தான் நடிக்க வைக்க முடிவு செய்தாராம்..

இருந்தாலும் வடிவேலு இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து முதலில் வடிவேலுவை அணுகுவோம் ஓகே சொல்லவில்லை என்றால் பிறகு சார்லிக்கு கதை சொல்லலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் வடிவேலுக்கு மாமன்னன் படத்தின் கதை ரொம்ப பிடித்துப்போக எந்த வித தயக்கம் என்று நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார்.