விஜய் நடித்த “கில்லி” படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்து இவரா.? வெளிவந்த உண்மை தகவல்.!

killi

நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதை களத்தில் வம்சி இந்த படத்தை எடுத்து வருகிறார் பிரமாண்ட பொருள் செலவில் தில்ராஜு தயாரித்து வருகிறார் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ்ராஜ், ஷாம், பிரபு மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாள் அன்று வாரிசு படத்தில் இருந்து அடுத்தடுத்த 3 போஸ்டர்களை ரிலீஸ் செய்தது மேலும் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தும் அவ்வப் பொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி கொண்டுதான் இருக்கின்றன இதனால் விஜய் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கில்லி.

இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். கில்லி படம் தெலுங்கு ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் கில்லி திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது.

ajith
ajith

ஆனால் முதன் முதலில் கில்லி திரைப்படத்தில் நடிக்க முதலில் இயக்குனர் அணுகியது விஜயை கிடையாதாம் தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களில் பின்னி பெடல் எடுக்கும் நடிகர் அஜித் இடம் தான் கில்லி படத்தின் கதையை கூறியுள்ளார் ஆனால் அஜித் அந்த சமயத்தில் இந்த கதையை நிராகரித்து விட கில்லி படத்தின் கதை விஜய்க்கு சென்றது அவர் ஓகே செய்து நடித்தார். கில்லி படம் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது.