சிறந்த இயக்குனர்களுடன் ஒரு நடிகர் இணையும் பொழுது அந்த படம் வெற்றி படமாக மாறும் அந்த வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இவர் ரஜினி, கமல், அர்ஜுன், விக்ரம் போன்ற டாப் நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும்..
தளபதி விஜய் உடன் இணையவில்லை என பல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு அந்த ஆசை நினைவானது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜயுடன் கைகோர்த்து நண்பன் என்னும் படத்தை எடுத்தார் நண்பன் படம் ஒரு ரீமேக் படம் தான்.. இந்தப் படத்தை தனக்கே ஊறிய பாணியில் இயக்குனர் சங்கர் சூப்பராக எடுத்திருந்தார்.
மேலும் விஜய்க்காக சில மாற்றங்களையும் கொண்டிருந்தார் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன், எஸ் ஜே சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்க்கு..
பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த சினிமா பட வாய்ப்புகளும் குவிந்தன இந்த படம் விஜய் கேரியரில் ஒரு பிளாக்பஸ்டர் படமாக பார்க்கப்பட்டது ஆனால் உண்மையில் நண்பன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் கிடையாது என கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக
பார்ப்போம்..
விஜய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தானாம்.. சில காரணங்களால் இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை பிறகு தான் தளபதி விஜய் இந்த படத்தில் இணைந்து நடித்தார் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் படமாக மாறியது.