என்னது விக்ரம் நடித்த ஐ படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இவரா.. எந்த பிரபலம் தெரியுமா.?

vikram

தமிழ் சினிமாவில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து பின்பு சேது திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் சியான் விக்ரம் இவரது நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தற்பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கரிகால சோழனாக நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக இவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஐ இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக விக்ரம் பல கஷ்டங்களை அனுபவித்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக விக்ரம் தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்துள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை எமி ஜாக்சன் இவருக்கு ஐ திரைப்படம் மூலம் பல ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

எமி ஜாக்சன் இந்த திரைப்படத்தில் பேசும் பேச்சு மிகவும் அழகாக இருக்கும் என பல ரசிகர்களும் கமெண்ட் செய்து வந்ததை நாம் பார்த்திருப்போம். இந்த திரைப்படத்தில் எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகை தான் நடிக்க இருந்தார் என ஒரு தகவல் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

samantha
samantha

ஆம் எமி ஜாக்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை சமந்தா தான் நடிக்க வேண்டுமாம் ஒரு சில காரணங்கள் குறித்து அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். பின்பு தான் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார் என இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.