தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு மற்றும் உடலையே வேற மாதிரி அமைத்துக்கொண்டு நடிப்பது இவருக்கு கை வந்த கலை. இதனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் மக்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
சியான் விக்ரம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் சமீபகால படங்கள் பெரிய வெற்றியை பெறாததால் தற்போது வெற்றியை கொடுக்க சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். அந்த திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தால் போதும் அதை வைத்து அடுத்தடுத்த வெற்றியை கொடுக்கலாம் என்பது அவரது கணிப்பாக இருக்கிறது.
அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்து மகான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் கூட அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை எடுத்து வருகிறார்.
இதில் ஒரு அரசனாக விக்ரம் நடித்து வருகிறார் இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விக்ரமை வைத்து இயக்குனர் பா. ரஞ்சித் படத்தில் அடுத்ததாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன அதற்கேற்றார்போல தற்போது இந்த கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணையும் படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை ஆனால் விரைவில் ஆதிகார பூர்வ தகவல் வரும் என தெரிய வருகிறது.