இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பல டாப் நடிகர்களை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல சிறந்த படங்களை கொடுத்துள்ளார். இவரது படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கின. இப்படி இருந்தாலும் அண்மைக்காலமாக இளம் இயக்குனர்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துச் கொண்டே செல்வதால் இந்த இயக்குனர்கள் ஈசியாக டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி விடுகின்றனர்.
அதனால் முன்னணி இயக்குனர்கள் பலருக்கும் தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கின்றன. இதனால் தமிழை தாண்டி மற்ற மொழி பக்கமும் பல இயக்குனர்கள் தாவி வருகின்றனர். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து RC 15 திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஷங்கர் சில வருடங்களுக்கு முன்பு கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை எடுக்க ஆரம்பித்தார் ஆனால் அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தின் பூஜையும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த இரண்டு படங்களிலும் பிஸியாக இருக்கும் ஷங்கருக்கு கனவு படம் ஒன்று இருக்கிறதாம். அந்தப் படத்தை தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்க முனைப்பு காட்டுவதாகவும் தெரிய வருகிறது. ஆம் அவர் வேள்பாரி என்ற வரலாற்று நாவலை படமாக எடுக்க உள்ளதாக சில நாட்களாகவே தகவல்கள் இணையதள பக்கத்தில் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை நெட்பிக்ஸ் மற்றும் கரண் ஜோகர் இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர். ஷங்கரின் இந்த வரலாற்று படத்தில் கே ஜி எஃப் நடிகர் யாஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இருந்தாலும் ஒரு மூத்த பத்திரிகையாளர் இந்த செய்தியை கூறியுள்ளார்.