அட்ரா சக்க.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவரா.? ஷாக்கான ரசிகர்கள்.

bigboss
bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க புதிய புதிய ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு ரொம்பவும் பிடித்துப்போன ஒரு நிகழ்ச்சி..

இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கியது இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். தானாகவே ஜி பி முத்து சில காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் நாமினேஷன் வைக்கப்பட்டது இதில் தனலட்சுமி, ஜனனி, மைனா நந்தினி,ரக்ஷிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம் பிடித்தனர். அசின் கேப்டனாக இருந்ததால் இந்த வாரம் அவர் நாமினேட் ஆகவில்லை..

இந்த வாரம் நாமினேஷனில் சிறந்த போட்டியாளர்கள் பலர் மாட்டியுள்ளனர் அதனால் யார் வெளியேறுவார் என்பது தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்பொழுது இந்த வாரத்தில் குறைந்த ஓட்டுகளை வாங்கி இருக்கும் நபர்களைப் பற்றிதான் நாம் பார்க்க இருக்கிறோம். மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை தற்போது பெற்றிருப்பது மைனா மற்றும் குயின்சி..

bigboss
bigboss

மறுபக்கம் இந்த வாரம் கதிரவன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது ஏனென்றால் இவர் சும்மாவாக தான் இருக்கிறார் என பல ரசிகர்கள் விமர்சிக்கின்றனர் இதனால் அவரும் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாம் மக்கள் கையில் தான் இருக்கிறது.