விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் உலகம் முழுவதும் நல்ல ஆதரவை பெற்று வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஏராளமான போட்டியாளர்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் பெற்று வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தமிழில் விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி ஒரு மணி நேர நிகழ்ச்சியாக 10:30 வரை ஒளிபரப்பாகி வருகிறது மேலும் ஓடிடியில் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஐந்தாவது சீசன் டிஆர்பியில் பெரிதும் அடி வாங்கிய நிலையில் ஆறாவது சீசனை சுவாரசியமாக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய பிரபலங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இந்த முறை சென்ற சீசர்களை விட விஜய் டிவியில் பணியாற்றி வரும் சில பிரபலங்கள் அதிகமாக கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் 40 நாட்களில் நடக்கக்கூடிய அனைத்து சண்டை சச்சரவுகளும் நான்கு நாட்களிலேயே நடைபெற்று வருகிறது மேலும் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் கடுமையாக போட்டி போட்டு கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அசல் குயின்ஸிலிடம் தவறாக நடந்து கொள்கிறார் என ரசிகர்கள் பல வீடியோக்களை போட்டு கோபப்பட்டு வருகிறார்கள் எனவே இது குறித்து கமலஹாசன் அவர்கள் இந்த வாரம் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இன்னொரு புறம் வீட்டில் எலிமினேட் செய்ய இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது அதாவது தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது மகேஸ்வரி தான் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள் ஏனென்றால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் நுழைந்து அதனை பெரிதாக சண்டையாக உருவாக்குகிறார் இதனால் ரசிகர்கள் மிகுந்த கோவத்தில் இருந்து வருகிறார்கள் எனவே இந்த வாரம் மகேஸ்வரி எலிமினேட் ஆகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.