திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறாரா..? சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்..!

dhanush-011

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் திருசிற்றம்பலம் இந்த திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகும் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில்  நடிகை ராசி கண்ணா அவர்கள் அனுஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் இவர் தனுஷின் பள்ளிப்பருவ தோழியாக நடித்து வந்துள்ளதாகவும் சமீபத்தில் இதைப் பற்றிய செய்திகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

அதேபோல இந்த திரைப்படத்தில் கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர் மேலும் இந்த திரைப்படத்தில் சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிப்பது மட்டுமின்றி தனுஷின் தோழியாக நடிகை சோபனா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு அனைத்து வகையான  நடிகர்களின் கதாபாத்திரம் என்னவென்று தற்போது இணையத்தில் லீக் ஆகி வந்த நிலையில் தனுஷ் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

thirusitram palam
thirusitram palam

அந்த வகையில் சமீபத்தில் அதற்கான விடை வெளியாகி உள்ளது அதாவது நடிகர் தனுஷ் என்ற திரைப்படத்தில் திருச்சிற்றம்பலம் என்ற கேரக்டரில் தான் நடித்து வருகிறாராம். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமான தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.