ஏழை மாணவர்களுக்காக தளபதி விஜய் பள்ளி கட்டுகிறாரா..? இணையத்தில் வெடித்த உண்மை தகவல்..!

vijay-01
vijay-01

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் தான் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

அந்த வகையில் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

பொதுவாக தளபதி விஜய் உதவி செய்யும் மனப்பான்மை  மக்களுக்கு தொண்டு செய்யும் மனப்பான்மை கொண்டவர் அந்த வகையில் சமீபத்தில் விஜய் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது தளபதி விஜய் சமீபத்தில் திருப்போரூரில் ஒரு பள்ளி ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் அந்தப் பள்ளியில் ஏழை எளிய மக்கள்  பிள்ளைகள் படிக்கும் வண்ணம் அவற்றை உருவாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இவ்வாறு வெளிவந்த அந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது என்று தற்சமயம் தெரியவந்துள்ளது. ஏனெனில் அந்த பள்ளிகூடத்தை விஜயின் உறவினரான பிரிட்டோ என்பவர் தான் கட்டி வருகிறாராம்.

இவ்வாறு பிரபலமான பிரிட்டோ விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ஆவார். அதுமட்டுமில்லாமல் இவர் மேலும் பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது