திரைஉலகில் அனுபவம் வாய்ந்த கூட்டணி எப்பொழுதும் மாபெரும் ஒரு வெற்றியை ருசிக்க்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று அந்த வகையில் சமீபகாலமாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனது பெயரை நிலை நாட்டியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவர் தனது ஆசை கனவு நாயகனாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து “விக்ரம்” என்ற திரைப்படத்தை எடுக்க உள்ளார் இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஏற்ற படியான திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியவர்களை வில்லனாக இறங்கியுள்ளார்.
இந்த படத்திற்கு இதுவே கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது இவர்கள் மூவரும் படத்தில் சந்திக்கும் காட்சியில் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் தற்போது கனவுக் கோட்டை கண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார்.
அதில் மூவரும் மிரட்டும் லுக்கில் இருந்தனர் இதைத்தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் வெகுவிரைவிலேயே தொடங்கியிருக்கிறது என்ற தகவலும் வெளியாகின. இந்த படத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் தொடர்ந்து நரேன், அர்ஜுன் தாஸ் போன்ற மற்ற நடிகர்களும் இந்த திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த பழத்தில் ஒவ்வொருவரின் கதாபாத்திரம் குறித்து சமீப காலமாக தகவல்கள் வெளியாகின்றன அந்த வகையில் கமல் பார்வையற்ற நபராக நடிப்பதாக தகவல்கள் கசிந்தன அதைத் தொடர்ந்து தற்போது பகத் பாசிலின் கதாபாத்திரம் குறித்தும் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரவிவருகிறது.
அதாவது விக்ரம் படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது மட்டும் இதுவரை தெரிய வராமல் இருக்கிறது.