விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கியது இதுவரை 70 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் ஆறாவது சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் ஜி பி முத்து சில சொந்த காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்
மற்றவர்கள் அனைவரும் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் கூட எலிமினேஷன் ரவுண்டு இருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் அடுத்தடுத்த டாஸ்குகளை கொடுத்து அசத்தி வருகிறது இப்படி சிறப்பாக ஓடி கொண்டு இருக்கின்ற நிலையில் அசீம் குறித்து பிரபல சீரியல் நடிகை பேசியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
பிரபல சீரியல் நடிகையும் சினிமா நடிகையுமான தேவி பிரியா அசீம் குறித்து பேசி உள்ளது. அசீம் எனக்கு நல்ல நண்பர் கிடையாது என் கணவரின் சீரியலில் அசீமும் நடித்தார் சன் டிவி பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் நடிகர் அருண் நடித்து வந்தார் அவர் சீரியலில் இருந்து விலக பின் அவருக்கு பதில் அசீம் நடிக்க தொடங்கினார்.
அசீம் வரும்பொழுது அவர் போட்ட கண்டிஷன்கள் அவர் விதித்த நிபந்தனைகள் அனைத்தும் இசைந்து கொடுக்கும் நிலையில் ப்ரொடக்ஷன் இருந்தது. காட்சிகளில் நடிக்கும் பொழுதே சத்தமே இல்லாமல் சொந்தமாக வசனம் பேசுவது ஷூட்டிங்கில் ஹீரோயிசம் காட்டுவது என்றெல்லாம் இருந்தார். இதனால் எனக்கும் அவருக்கும் பலமுறை வாதம் நீண்டது ஒரு கட்டத்தில் நீங்கள் எல்லாம் டைரக்டர் ஆனா நான் நடிக்க மாட்டேன் என்றார் அசீம்.
அதற்கு நானும் நீ நடிகனே இல்லை என்பது போல், உங்களை ஹீரோவாக நான் நினைக்கல என சொன்னேன். அப்பொழுதும் சண்டை அதிகரித்தது எங்கள் சண்டையை விளக்கவே பெரிதும் கஷ்டப்பட்டார்கள். மேலும் அசீம் என்னை நீ ஹைதராபாத்திலிருந்து வந்தால் பெரிய இவளா நீ உன்னை செஞ்சிடுவேன் என என்னைப் பேசி இருப்பார். இப்படி அசீம் குறித்து பல விஷயங்களை உடைத்தார் தேவி பிரியா.