அர்ஜுன் டெண்டுல்கரின் பவுலிங் சூப்பரா.? சுமாரா.? மார்க் போட்ட கிரிக்கெட் பிரபலங்கள்.

arjun-tendulkar
arjun-tendulkar

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முன்னேறி வருகின்றனர். அதன்படி நேற்று மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில்  மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை ருசித்தது இந்த போட்டியில் நடந்த சுவாரசியத்தை பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம். சச்சினின் மகன் மும்பை அணிக்காக கடந்த ஒரு சில வருடங்களாக அணியில் இருக்கிறாரே தவிர விளையாடவில்லை என பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் நேற்றைய போட்டியில் விளையாண்டார். முதல் ஓவர் அர்ஜுன் டென்டல்கர்  சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் இரண்டாவது ஓவரில் நன்றாக பவுலிங் செய்தாலும் ஒரு சில பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார்.

பேட்டிங்கில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் அவருடைய பௌலிங் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டிய நிலையில் தற்போது கிரிக்கெட்  பிரபலங்கள் பலரும் அர்ஜுன் டென்டல்கரின் பவுலிங் -க்கு  மார்க் போட்டு வருகின்றனர் அதன்படி இந்தியா அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் அர்ஜுன் டெண்டுல்கர்  குறித்து பேசி உள்ளது வைரலாகி வருகிறது அவர் சொன்னது..

அர்ஜுன் டெண்டுல்கரின் வந்து வீச்சு புத்திசாலித்தனமாக இருந்தது என்று கூறினார் இவரை தொடர்ந்து ஸ்ரீசாந்த் கூறியது.. மைதானத்தில் அவரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஒரு ஜாம்பவான் கிரிக்கெட்டரின்  மகனைப் பார்ப்பது சந்தோஷமான ஒன்று ஒரு ஜாம்பவானுக்கு மகனாக இருந்து வந்து விளையாடுவது எளிதான காரியம் கிடையாது.

ஆனால் அர்ஜுன் டெண்டுல்கர் மிக நல்ல முறையில்  வெளிப்பட்டார் மேலும் அவர் தனது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதாக நான் உணர்கிறேன் அவர் ஒரு விக்கெட்டை பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். கிடைக்க விட்டாலும் சச்சின் சார் போன்ற ஒரு தந்தை இருப்பது அவர் நல்ல நிலைக்கு வர உதவும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.