சின்னத்திரையில் மக்களின் பொழுது போக்கிற்காக வித்தியாசமான கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் மக்கள் பலருக்கும் ஃபேவரட் ஆக அமைகின்றன.
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பி யில் தொடர்ந்து டாப் லிஸ்டில் இருக்கின்றன. இந்தத் தொடரில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ராவின் எதார்த்தமான நடிப்பு மக்கள் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. தற்போது இந்த தொடரில் மகா சங்கமம் நடந்து வருகின்றன.
பாக்யாவின் மாமனார் பிறந்தநாளுக்காக அவர்களது சொந்தக்காரர் என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குடும்பம் பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு வந்துள்ளன. இந்த இரண்டு குடும்பமும் ஒன்றாக பேசி மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் பாக்யாவின் கணவர் கோபிக்கு மட்டும் இத்தனை பேர் வீட்டில் வந்து தங்கி இருப்பது பிடிக்காமல் இருப்பது போன்று தற்போது கதைகளம் நகர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பாக்யாவின் மூத்த மருமகளாக ஜெனிஃபர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியல் ஆன செல்லம்மா சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் பாக்கியலட்சுமி தொடரில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா அவரது இன்ஸ்டா பக்கத்தில் திவ்யா கணேஷின் புகைப்படத்தை வெளியிட்டு மிஸ் யூ என பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் திவ்யா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாரா என கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர் விலகவில்லை பாக்கியலட்சுமி ஷூட்டிங் முடிந்த பிறகு செல்லம்மா சீரியல் சூட்டிங்கு செல்வதால் மிஸ் யூ என நேஹா பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.