பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அதன்பிறகு படிப்படியாக தன்னுடைய திறனின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவ்வாறு பிரபலமான நமது அனிதா சம்பத் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேபோல சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்திலும் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைப்படத்திலும் அனிதா சம்பத் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரிய அளவு ஆதரவை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டிய நமது அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு ஆதரவு கிடைக்கும் என நினைத்த நிலையில் பல்வேறு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை மட்டுமே சம்பாதித்து சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டார்.
மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பொழுது சக போட்டியாளர்கள் இடம் தன்னுடைய கணவரை பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார். அதுமட்டுமில்லாமல் சக போட்டியாளர்கள் அவருடைய கணவரின் பெயரை சொன்னால் கூட என்னுடைய கணவரின் பெயரை சொல்லக்கூடாது என போட்டியாளர்களிடம் எச்சரித்தார்.
ஏனெனில் அனிதா சம்பத் தன்னுடைய கணவன் மீது அதிக அளவு அன்பு வைத்திருப்பது மட்டுமில்லாமல் தற்போது அனிதா சம்பத் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தள பக்கத்தில் வெளிவந்த செய்தியின் மூலமாக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் இவ்வாறு வெளிவந்த செய்தி ஆனது மிகமிக தவறானது என்று கூறப்பட்ட நிலையில் அது வெறும் பொழுதுபோக்கிற்கான வீடியோ அதை நீங்கள் உண்மை என நம்பிக்கொண்டு எனக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டு வருகிறீர்கள் என்று அனிதா சம்பத் கூறியுள்ளார்.