சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் இளம் வயதிலேயே பல டாப் நடிகர்கள் படங்களில் இசை அமைத்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது படிப்படியாக உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் இதுவரை அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூடக் இவரது கையில் காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட், விக்ரம், திருச்சிற்றம்பலம், இந்தியன்2 போன்ற முன்னணி நடிகர்கள் படங்களை கையில் வைத்திருப்பதால் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார் இசையமைப்பாளர் அனிருத் மேலும் அவ்வப்போது படங்களிலும் தலைகாட்டி வருகிறார். இதனால் ரசிகர்களின் பேவரைட் இசையமைப்பாளராக தற்போது அனிருத் விஸ்வரூபம் எடுத்து உள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் அனிருத்தின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வாழ்த்து தெரிவித்தனர். வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் அனிருத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் அந்த வகையில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளாராம் இருவரும் இருக்கும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் தற்போது பரவி வருவது.
புகைப்படத்தை பார்த்து பல கேள்விகளையும் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த புகைப்படம் இருந்து வந்துள்ளது அனிருத், மாளவிகா மோகனன் தோளில் கை போட்டுக்கொண்டே மிக நெருக்கமாக அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காதலிக்கிறார்களா என்று கிசுகிசுக்கின்றனர்.
பிரபலங்களை பொறுத்தவரை ஒரு நடிகர் நடிகை இருவரும் ஒன்றாக இணைந்து விட்டாலே காதலிப்பதாக ரசிகர்கள் புரளி கிளபுவது வழக்கம். இதற்கு முன்பு கூட அனிருத் பிறந்தநாள் கொண்டாடிய போது கீர்த்தி சுரேஷ் அனிருத் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த அப்போது நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேட்டனர் தற்பொழுது மாளவிகா மோகனன் உள்ளதால் அவரை வைத்து செய்கின்றனர் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.