தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வரும் அஜித் சத்தமின்றி சினிமா உலகில் வெற்றியை கண்டு வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது நடித்து வரும் வலிமை திரைப்படத்தையும் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது படக்குழு தீபாவளி அன்று வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்த்தது ஆனால் தற்போது அதில் இருந்து பின்வாங்கி வேறு ஒரு தேதியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு ரசிகர்களோ தற்போது ரிலீஸ் தேதியை நீங்கள் சொல்வதற்கு முன்பாக படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவற்றை வெளியிட்டால் நாங்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருப்போம் என கூறியுள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென வலிமை படத்தின் டீசர் குறித்து இன்று இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதாவது வலிமை படத்தின் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது இதை ஒருசில அஜித் ரசிகர்கள் கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லாமல் இருப்பதால் இதை நம்புவதா நம்பாமல் இருப்பதா என்று தெரியாமல் தலையை பிச்சுக்கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள்.
உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் சரியான நேரத்தில் சொல்லாததால் இன்று இரவு 12 மணிக்கு வலிமை படத்தின் டீசர் வெளி வந்தாலும் வரலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் இன்று இரவு காத்திருக்க ரெடியாக இருக்கின்றனர்.