அஜித்தின் “துணிவு” படம் இப்படிப்பட்ட ஒரு கதையா.? மிகப்பெரிய சமூகப் பிரச்சனையை படமாக எடுத்துள்ள ஹச். வினோத் – செம மாஸ் இருக்கே..

thunivu
thunivu

வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் ஒருமுறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் துணிவு இந்த படம் அஜித்திற்கு 61வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது .

இறுதி கட்ட ஷூட்டிங் சென்று வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் போஸ்டர் ஆகியவை வெளிவந்துள்ளன. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன மேலும் அஜித் நடித்து வரும் துணிவு படம்.

மிகப்பெரிய ஒரு பேங்க் ராபரி சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் உண்மையில் ஹச் வினோத் இந்த படத்தை ஒரு சமூக அக்கரை உள்ள ஒரு படமாக எடுத்துள்ளதாக ஒரு தகவல் இணையதள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. துணிவு படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்றால் சமீபகாலமாக பலரும் சந்தித்து வரும் பிரச்சனை வங்கி கடன் அதுவும் கொரோனா தொற்று காரணமாக..

பலர் தங்களது வேலையை இழந்த சூழ்நிலையில் அவர்கள் வாங்கிய வங்கி கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர் இதனால் மல்டி நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறது லோன் வாங்கிய கஷ்டமரை அசிங்கப்படுத்துவது அவமானப்படுத்துவது என பல மட்டமான வேலையை செய்து வருகின்றனர்.

இதை தாங்க முடியாத சில பேர் வேறு வழி இன்றி தற்கொலையும் செய்து கொண்டிருக்கின்றனர் இதன் காரணம் வங்கி ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்வது தான். இதைதான் ஹச் வினோத் படமாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இது போன்ற வாடிக்கையாளர்கள் மோசமாக நடந்து கொள்ளும் வங்கியை குறி வைத்துதான் ராபரி நடக்கிறது கொள்ளை அடிக்கப்பட்ட பணம் யாரை போய் சேருகிறது என்பது தான் படம். இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.