தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் அப்படி இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அடுத்து ஏகே 62 படத்தில் நடிக்க ரெடியானார் இந்த நிலையில் தான் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடிகர் அஜித்தின் தந்தை இயற்கை எழுதினார்.
இதைக் கேட்ட அஜித் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் வரமுடியாதவர்கள் சமூக வலைதள பக்கங்களில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிலையில் அஜித் அப்பா எப்படிப்பட்டவர் என்பது குறித்து பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசிய உள்ளார் அதில் அவர் சொன்னது..
அஜித்திற்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி இருக்கின்றனர் அண்ணன் அனுப் குமார், தம்பி அனில் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணன் அனுப் குமார் மும்பையில் தொழில் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் தம்பி அனில் குமார் சென்னை ஐஐடி நிறுவனத்தில் பேராசிரியர் அப்பாவைப் போல அண்ணன், தம்பிகளும் ஊடக வெளிச்சம் இன்றி வாழ அஜித் சினிமாவில் பெரிய நாயகனாக ஜொலித்து வருகிறார்.
அஜித்தின் அப்பா எப்பொழுதுமே ஐ அம் பாலக்காடு சுப்பிரமணி சொல்லிக் கொள்வாராம்.. அஜித்தின் அப்பா என யாராவது அழைத்தால் ரொம்ப கோபப்படுவாராம். அவருக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் பேசக்கூடியவர் அது என்னவோ அவருக்கும், அஜித்துக்கும் இடையே சரியான உறவு இல்லை என கூறப்படுகிறது. அதனால் அவர் அஜித்தின் திருமணத்திற்கு கூட கலந்து கொள்ளவில்லை. முக்கிய நிகழ்ச்சி என்றால் அம்மாவை தான் அஜித் அதிகம் கூப்பிடுவார்.
அஜித் அப்பா பற்றி எங்கேயும் பேச மாட்டார் குடும்பத்தை விட்டு ஏழு வருடங்கள் பிரிந்து இருந்தார் சுப்பிரமணி. அப்பா, அம்மாவுக்கு சென்னை ஈச்சம்பாக்கத்தில் ஒரு வீடு கட்டி கொடுத்து கவனித்துக் கொண்டார் அஜீத் இருவர்களையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் அஜித் அம்மா மோகினி வயது முதிர்வால் நினைவு தப்பி இருக்கிறார் அப்பாவும் கடந்த சில வருடங்களாக பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். அஜித்தின் அப்பா வெளிநாடு சுற்றுப்பயணம் செய்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.
அப்பாவை சொகுசுகப்பழலில் தொடர்ந்து ஆறு மாதங்கள் சுற்றுலாவுக்கு அஜித் அனுப்பி வைப்பாராம் தனியாக சென்று ஜாலியாக உல்லாசமாக இருந்து ஒருவர் சுப்பிரமணி வாழ்க்கையை அனுபவித்து மறைந்துள்ளார் தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் நான் ஒரு ஜாலி மனிதர் என அடிக்கடி சொல்வாராம் சுப்பிரமணி. சுப்பிரமணி அவர்களும் ரங்கநாதனும் அருகருகே வசித்தனர் காலை ஒன்றாக தான் வாக்கிங் செல்வோம் என கூறினார்.